துணி துவைக்கும் இடத்தில் பிரச்சனை: பொலிசை அழைத்த பெண்

Report Print Deepthi Deepthi in சுவிற்சர்லாந்து
துணி துவைக்கும் இடத்தில் பிரச்சனை: பொலிசை அழைத்த பெண்
1410Shares

சுவிட்சர்லாந்தில் துணி வைக்க சென்ற பெண்ணை அறைக்குள் வைத்து பூட்டி வைத்துவிட்டதால் அவர் அலறியடித்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்து பெரும் ரகளையை ஏற்படுத்தியுள்ளார்.

சுவிஸின் சூரிச் ஒன்றில் உள்ள குடியிருப்பில் பொதுவாக இருக்கும் துணி துவைக்கும் அறையில் பெண் ஒருவர், தனது அழுக்கு துணிகளை துவைக்க சென்றுள்ளார்.

அப்போது, அந்த அறையை அடைக்கும் நேரம் வந்துவிட்டதால், பக்கத்து வீட்டில் வசிப்பவர் இப்பெண்ணிடம், நான் அறையை அடைக்கபோகிறேன் என தெரிவித்துள்ளார், ஆனால் அப்பெண் கண்டுகொள்ளாமல் இருக்கவே, இந்நபர் அப்பெண்ணை உள்ளே வைத்து அறையை அடைத்துவிட்டு சென்றுள்ளார்.

அதன்பின்னர், அப்பெண் தன்னை காப்பாற்றுமாறு உள்ளே இருந்து சத்தம் எழுப்பியுள்ளார், ஆனால் உதவிக்கு யாரும் வராத காரணத்தால் பொலிசாருக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார், பொலிசார் விரைந்து வருவதற்குள் இப்பெண், துடைப்பத்தை வைத்து கதவினை தட்டி திறந்துள்ளார்.

பெரும் ஆபத்து என நினைத்து விரைந்து வந்த பொலிசார், அப்பெண்ணிடம் விசாரித்ததில், அப்பெண் நடந்தவற்றை கூறிவிட்டு, மீண்டும் துணிதுவைக்க ஆரம்பித்துள்ளார்,

குடியிருப்பில் ஒற்றுமை இல்லாத காரணத்தால் இதுபோன்று நடந்துள்ளது என கருதிய பொலிசார் அவ்விடத்தை விட்டு சென்றுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments