மலையின் அந்தரத்தில் தொங்கிய டிராக்டர்: சாமர்த்தியமாக மீட்ட தீயணைப்பு குழு

Report Print Basu in சுவிற்சர்லாந்து
மலையின் அந்தரத்தில் தொங்கிய டிராக்டர்: சாமர்த்தியமாக மீட்ட தீயணைப்பு குழு

சுவிட்சர்லாந்தில் டிராக்டர் ஒன்று நெடுஞ்சாலை அருகே உள்ள மலையில் விபத்துக்குள்ளாகி அந்தரத்தில் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில், ஆப்வால்டன் மண்டலத்தில் உள்ள A8 நெடுஞ்சாலைக்கு அருகே மலை ஒன்று அமைந்துள்ளது.

குறித்த மலையின் மேல் சென்றுகொண்டிருந்த டிராக்டர் ஒன்று, திடீரென விபத்துகுள்ளாகி பாதுகாப்பு சுவரை உடைத்து கொண்டு மலையில் இருந்து உருண்டுள்ளது.

பின்னர், மலையில் சிக்கி A8 நெடுஞ்சாலைக்கு மேல் அந்தரத்தில் தொங்கியது.

தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த தீயணைப்பு குழுவினர், முதலில் டிராக்டரில் சிக்கி இருந்த ஓட்டுநரை மீட்டு ஹெலிகாப்டர் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர், கிரேன் உதவியுடன் டிராக்டர் தரையிரக்கப்பட்டது. டிராக்டரை மீட்கும் பணிக்காக A8 நெடுஞ்சாலை மூன்று மணிநேரம் மூடப்பட்டதால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் பல ஆயிரம் பிராங்குகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments