சுவிஸில் அதிகரிக்கும் லட்சாதிபதிகளின் எண்ணிக்கை!

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
சுவிஸில் அதிகரிக்கும் லட்சாதிபதிகளின் எண்ணிக்கை!
667Shares

கடந்த ஆண்டை விட சுவிட்சர்லாந்தில் லட்சாதிபதிகளின் எண்ணிக்கை 5% அதிகரித்துள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

உலகில் அதிக லட்சாதிபதிகளை கொண்ட நாடுகளில் சுவிட்சர்லாந்து இந்த முறை 7வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

கடந்த ஆண்டு 7வது இடத்தில் இருந்த கனடா 3% வீழ்ச்சியை சந்தித்ததை அடுத்து 8வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதால் கனடா 8வது இடத்திற்கு வந்துள்ளது. ஆனால் சுவிட்சர்லாந்தில் சேமிப்பு விகிதம் உயர்வடைந்து, தனிநபர் சொத்து சேர்க்கை அதிகரித்துள்ளது என பட்டியலிடுகிறது இந்த ஆய்வினை மேற்கொண்ட தனியார் நிறுவனம்.

உலக அளவில் பொருளாதாரம் வலுவடைந்துள்ளதாக குறிப்பிடும் இந்த ஆய்வு, இதனால் பெருவணிகர்களின் சொத்து மதிப்பு சுமார் 7.2% வரை உயர்வை கண்டுள்ளதாக தெரிவிக்கின்றது.

உலக அளவில் ஒட்டுமொத்தமாக லட்சாதிபதிகளின் எண்ணிக்கை 15.4 மில்லியன் என அதிகரித்துள்ளது என தெரிவிக்கும் அந்த ஆய்வில், இது கடந்த ஆண்டை விட 4.9% அதிகம் என கூறுகின்றது.

முதன்முறையாக வட அமெரிக்க நாடுகளை பின்னுக்குதள்ளி ஆசிய-பசிபிக் பிராந்தியம் அதிக செல்வந்தர்களை கொண்ட பகுதியாக மாறியுள்ளது.

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் லட்சாதிபதிகளின் எண்ணிக்கை 9.9% அதிகரித்துள்ளது, இது 17,400 பில்லியன் டொலர் மொத்த சொத்துமதிப்பாக கருதப்படுகிறது.

ஐரோப்பா தொடர்ந்து 3வது இடத்தில் நிலைகொண்டுள்ளது. லத்தீன் அமெரிக்கா கடந்த ஆண்டை விட 3.7% வீழ்ச்சி கண்டுள்ளது.

4.46 மில்லியன் லட்சாதிபதிகளுடன் அமெரிக்கா முதலிடத்திலுள்ளது. முதன்முறையாக 1 மில்லியன் லட்சாதிபதிகளின் எண்ணிக்கையை எட்டியுள்ளது ஜேர்மனி.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments