சுவிட்சர்லாந்து நாட்டில் மூன்று ஆண்களுடன் உறவுக்கொண்ட பிறகு கற்பழித்து விட்டதாக புகார் கூறிய பெண்ணின் நாடகம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சுவிஸின் ஜெனிவா நகரில் உள்ள நிறுவனம் ஒன்றில் 38 மற்றும் 45 வயதுடைய மூன்று ஆண்கள் பணிபுரிந்து வந்துள்ளனர். இவர்களுடன் 22 வயதான இளம்பெண் ஒருவரும் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், மூவருடனும் உல்லாசமாக இருக்க சம்மதித்த அப்பெண் அவர்களுடன் வெளியே புறப்பட்டுள்ளார்.
வெளியே சென்ற அந்த ஓர் இரவில் மட்டும் பல இடங்களில் மூவருடனும் அப்பெண் உல்லாசமாக இருந்துள்ளார்.
ஜெனிவா தெரு, கார், திறந்தவெளி புல்வெளி மற்றும் ஹொட்டல் உள்ளிட்ட பல இடங்களில் அவர்கள் நால்வரும் உறவுக் கொண்டுள்ளனர்.
கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பாக மூவர் மீதும் கற்பழிப்பு புகார் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று ஜெனிவா நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.
மூவருடன் வெளியே சென்ற போது, திறந்தவெளி புல்வெளியில் மட்டும் உறவுக்கொள்ள தான் சம்மதிக்கவில்லை என்பதால், அவர்கள் என்னுடைய விருப்பத்தை மீறி பலாத்காரம் செய்துவிட்டதாக அப்பெண் புகார் கூறியுள்ளார்.
ஆனால், பெண்ணின் குற்றத்தை நீதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை.
‘பிற இடங்களில் உல்லாசமாக இருக்க சம்மதித்த அப்பெண் புல்வெளியில் மட்டும் அவர் எதிர்ப்பை தெரிவித்ததை அந்த 3 ஆண்களும் புரிந்துக் கொண்டிருக்க வாய்ப்பில்லை.
இதுமட்டுமில்லாமல், இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவில்லை. பெண்ணிற்கு பதிலாக அவரது முன்னாள் காதலன் தான் வழக்கு தொடர்ந்துள்ளார்.
எனவே, மூவர் மீதுள்ள குற்றங்களுக்கு அடிப்படை ஆதாரம் இல்லாத காரணத்தினால் அவர்களை விடுதலை செய்வதாக நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
மூவருடனும் பல இடங்களில் உல்லாசமாக இருந்த பெண்ணின் விவகாரம் நிறுவனத்திற்கு தெரியவர அவரை உடனடியாக பணியிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.