வாடிக்கையாளர்களை கவர நூதன முயற்சியில் இறங்கிய பாலியல் தொழிலாளிகள்

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
வாடிக்கையாளர்களை கவர நூதன முயற்சியில் இறங்கிய பாலியல் தொழிலாளிகள்
1111Shares

சுவிட்சர்லாந்து நாட்டில் வாடிக்கையாளர்களை கவர பாலியல் தொழிலாளிகள் புதிய நூதன முயற்சியில் ஈடுப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிட்சர்லாந்து நாட்டில் பாலியல் தொழில் செய்வதற்கு அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது.

எனினும், பொது இடங்களில் பாலியல் தொழில் புரிவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் சூரிச் நகரில் Sex-Boxes என்ற பாலியல் தொழில் செய்வதற்கான ஸ்பெஷல் அறைகளை அரசு திறந்து வைத்துள்ளது.

இதன் மூலம் பாலியல் தொழிலாளிகள் பெருமளவில் வருமானம் ஈட்டி வருகின்றனர். ஆனால், வருமானத்தை மேலும் கூட்டவும், வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கவும் பாலியல் தொழிலாளிகள் தற்போது புதிய முயற்சியில் இறங்கியுள்ளனர்.

சுவிஸில் Mobility என்ற நிறுவனம் கார்களை வாடகைக்கு விட்டு வருகிறது. இந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துக்கொண்டுள்ள சில பாலியல் தொழிலாளிகள் ஓடிக்கொண்டுருக்கும் கார்களிலேயே தொழிலில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

காரில் 15 முதல் 30 நிமிடங்கள் மட்டுமே பாலியல் தொழிலாளிகள் வாடிக்கையாளர்களுடன் இருப்பதால், ஒரு நாளுக்கு அதிக வாடிக்கையாளர்களை அவர்களால் கவர முடிகிறது.

இதன் மூலம் அவர்களுக்கு வருமானமும் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற முயற்சிகள் சட்டத்திற்கு எதிரானது எனவும் புகார்கள் எழுந்துள்ளன.

ஆனால், Mobility நிறுவனம் இந்த புகார்களை மறுத்துள்ளது. இது குறித்து நிறுவனத்தின் செய்தி தொடர்பாளரான Patrick Eigenmann என்பவர் பேசியபோது, ‘சுவிஸின் சட்டத்திற்கு உட்பட்டு தான் பாலியல் தொழிலாளிகளுக்கு கார்களை வாடகை விட்டு வருகிறோம்.

தங்களுடைய கார்களில் பாலியல் தொழிலாளிகள் வாடிக்கையாளர்களுடன் இருப்பதற்கு நாங்கள் முறையாக அனுமதி வழங்கியுள்ளோம்.

இதனால் நிறுவனத்திற்கு கூடுதலான வருமானம் கிடைக்கிறது. பாலியல் தொழிலாளுகளுக்கும் தகுந்த பாதுகாப்பும் கிடைக்கிறது’’ என Patrick Eigenmann தெரிவித்துள்ளார்.

பாலியல் தொழில் நடத்துவது தொடர்பாக எழுந்துள்ள பல்வேறு சர்ச்சைகளை தொடர்ந்து, இத்தொழிலை அரசாங்கமே ஏற்று நடத்த வேண்டும் என சூரிச் மாகாண அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments