கவனம் சிதறியதால் பறிபோன உயிர்: சுவிஸ் சாலையில் நிகழ்ந்த பயங்கர விபத்து

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
கவனம் சிதறியதால் பறிபோன உயிர்: சுவிஸ் சாலையில் நிகழ்ந்த பயங்கர விபத்து

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சாலையில் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஓட்டுனர் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் ஆர்கவ் மாகாணத்தில் உள்ள Wettingen என்ற நகருக்கு அருகில் தான் இந்த கொடூரமான விபத்து நிகழ்ந்துள்ளது.

இன்று காலை 11 மணியளவில் 43 வயதான நபர் ஒருவர் தனது காரை எடுத்துக்கொண்டு வெளியே புறப்பட்டுள்ளார்.

சூரிச்சில் உள்ள Furttal என்ற நகரை நோக்கி பறந்த அந்த கார் A1 நெடுஞ்சாலையில் பயணம் செய்துள்ளது.

சாலையில் கார் சென்றுக்கொண்டு இருந்தபோது, திடீரென கவனத்தை சிதறவிட்ட ஓட்டுனரின் கார் சாலையின் எதிர்புறமாக பயணித்துள்ளது.

அப்போது, எதிர்புறத்திலிருந்து அசுர வேகத்தில் வந்த குட்டி வேன் ஒன்று கார் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியுள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மீட்புக் குழுவினர் 43 வயதான ஓட்டுனரை ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால், நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் அவரை மருத்துவர்கள் காப்பாற்ற முடியவில்லை. எனினும், குட்டி வேனின் ஓட்டுனரான 55 வயதான நபர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

இரு கார்களுக்கும் ஆயிரக்கணக்கான பிராங்க் மதிப்பில் சேதாரம் ஏற்பட்டுள்ளது. விபத்தினை தொடர்ந்து சில மணி நேரம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டு ஓட்டுனர் ஒருவர் உயிரிழந்துள்ள இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments