ஓய்வு பெறும் வயதை 67 ஆக அதிகரிக்க அரசு அதிரடி திட்டம்

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
ஓய்வு பெறும் வயதை 67 ஆக அதிகரிக்க அரசு அதிரடி திட்டம்

சுவிட்சர்லாந்து நாட்டில் பொதுமக்கள் பணியிலிருந்து ஓய்வு பெறும் வயதை 67 ஆக அதிகரிக்க அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிஸில் பொதுமக்கள் பணியிலிருந்து ஓய்வு பெறும் தற்போதைய வயதாக 65(ஆண்), 64(பெண்) என நடைமுறையில் இருந்து வருகிறது.

ஆனால், ஆண் மற்றும் பெண் ஆகிய இருபாலினரும் ஓய்வு பெறும் வயதை 67 ஆக அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

அரசின் இந்த புதிய திட்டத்தை பொதுமக்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்பது குறித்து Tamedia என்ற நிறுவனம் அண்மையில் வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியுள்ளது.

நாடு முழுவதும் சுமார் 13,000 நபர்களிடம் எடுக்கப்பட்ட இந்த வாக்கெடுப்பில் 57 சதவிகித நபர்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதாவது, 67 வயது வரை பணிபுரிய சுவிஸ் பொதுமக்கள் விரும்பவில்லை.

இதற்கு எதிர்மறையாக, 27 சதவிகித நபர்கள் அரசின் புதிய திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், 16 சதவிகித நபர்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களுக்கு அளிக்கப்படும் ஓய்வூதிய தொகையை படிப்படியாக அதிகரிக்கவே இந்த புதிய ஓய்வு வயதை அறிமுகப்படுத்தவுள்ளதாக சுவிஸ் அரசு தெரிவித்துள்ளது.

எனினும், அரசின் இந்த புதிய திட்டத்திற்கு நாடு முழுவதும் உள்ள பெரும்பான்மையான பொதுமக்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தால் மட்டுமே இதனை நடைமுறைப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments