சுவிற்சர்லாந்தில் சிறப்பாக இடம்பெற்ற ஞானலிங்கேஸ்வரர் திருத்தேர் திருவிழா: அலைகடலாக திரண்ட தமிழர்கள்

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து

சுவிற்சர்லாந்தின் தலைநகர் பேர்ன் நகரில் உள்ள அருள் ஞானமிகு ஞானலிங்கேஸ்வரர் திருக்கோவிலின் தேர்த் திருவிழா மிக சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

ஈழத்தின் மணிமுத்து நகர் யாழிருந்து நந்தனின் கைவண்ணத்தில் அமையப்பெற்ற புதிய தேர் சுவிற்சர்லாந்து வந்தடைந்து, சப்பறத்திருநாளில் வெள்ளோட்டம் காணப்பட்டு நேற்று தேர்த் திருவிழா நடத்தப்பட்டுள்ளது.

பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வந்து எம்பெருமானின் அருளை பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதன்போது, இறை திருவுருவங்கள் ஊர்வலம் வந்து அடியார்களை தேடிச் சென்று அருள் வழங்குவதுடன், ஊர் மக்களின் உள்ளத்து மகிழ்சிக்குக் வலுச்சேர்க்கும் விழாவாக அமைந்து தமிழ்ச்சமூகம் ஒன்றிணைந்து வடம் பிடித்து திருவாசல் வரும் வரை தேர் இழுத்துள்ளனர்.

அத்துடன், நிகழ்வில் சுவிற்சர்லாந்தில் வாழும் தமிழர்கள் உட்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இருந்து தமிழ் மக்கள் வந்து கலந்து கொண்டுள்ளனர்.

பல்சமய இல்லத்தின் தலைவி, சட்டவாளர், முன்னை நாள் பேர்ன் நகர நகரசபை அதிபர் றெகுலா மைடர் திருவிழா சிறக்க தனது வாழ்த்தினைத் தமிழில் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் இருந்து இந்திரனின் இசைக்குழு உமாசதீஸையும் பிரான்ஸ் நாட்டில் வாழும் தமிழ்க் கலைஞர்களையும் இணைத்து சுவிஸ் நாட்டின் மயில் மற்றும் ஏனைய கலைஞர்கள் படைத்தளித்த சிறந்த இசை நிகழ்வும் நடத்தப்பட்டுள்ளது.

ஈழப்பாடல்களும் சைவத்தமிழ் பாடல்களும் ஒலித்து மக்களை தாயகத்தின் உணர்வினை மீட்டுவதாகவும் அமைந்துள்ளது. கூத்தன் திருத்தேர் ஏறிவந்த பாதையில் நாட்டிய நிகழ்வு தமிழ்க் கலையினை பிறநாட்டவர்களுக்கு ஆச்சரியத்தையும் அழித்துள்ளது.

இதேவேளை, பாற்குட உலா, தீச்சட்டி நோன்பு, காவடி என சைவமும் தமிழும் பேர்ன் நகரில் ஓங்கி ஒலிக்க, சில சுவிஸ் நாட்டவர்களும் நோன்பு நோற்று பாற்குடம் எடுத்து வலம் வந்துள்ளனர்.

மேலும், செந்தமிழ் திருமறை எண்திசையும் ஒலிக்க, தமிழா வழிபாடு, தமிழில் வழிபாடு எனும் மகுடம் விண்ணெட்ட சிறந்த பெருவிழாவாக ஞானலிங்கேஸ்வரர் தேர்த்திருவிழா முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலதிக புகைப்படங்களை பார்வையிட இங்கே அழுத்தவும்

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...