மூன்றில் ஒருவர்தான் பாலியல் புகார் தெரிவிக்கின்றனர். ஐ.நா அறிக்கை

Report Print Abisha in அறிக்கை

பாலியல் துன்புறுத்தல் குறித்த குற்றச்சாட்டில் மூன்றி ஒருவர் மட்டுமே புகார் தெரிவிப்பதாக ஐநா தெரிவித்துள்ளது.

உலக நாடுகளில் பணி செய்யும் பெண்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் . பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான சீண்டல்கள் குறித்து பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அது குறித்து ஐநா செயலாளர் அன்டோனியோ கெடரெஸ் கூறியது. உலகெங்கிலும் உள்ள பெண்களில் தங்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் குறித்து வெளியில் கூறும் அளவில் இன்றும் இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்றில் ஒருவர் மட்டுமே புகார் அளித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஆய்வில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வியில் 30ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தங்களுக்கு நடந்த பாலியல் குற்றங்கள் குறித்து புகார் அளிக்காமலேயே இருந்துள்ளனர். கிட்டத்தட்ட 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புகார் தெரிவித்துள்ளனர்.

இதில் 12 சதவிகிதம் ஊழியர்கள் தங்களின் மூத்த அதிகாரிகளால் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகி உள்ளனர். 21.7 சதவிகிதம், பெண்கள் விரும்பாதவண்ணம் பாலியல் தொடர்பாக பேசுவது மற்றும் நகைசுவை கூறுவதாக உள்ளது. 13 சதவிகிதம் விரும்பாத வகையில் நடந்து கொள்வது மற்றும் சீண்டுவது உள்ளிட்டவை உள்ளடங்கும். 10 சதவிகிதம் பாலியல் ரீதியான உடல்மொழி பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் குறிப்பாக பாதிக்கப்படும் ஐந்தில் இரண்டு பேர் 25லிருந்து 35வயதிற்கு உட்பட்ட பெண்களாகவே உள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலம் 68 சதவிகித பாலியல் சீண்டல்கள் ஆண்களால் நடைபெறுவதாகவும், 15 சதவிகிதம் பெண்களாலேயே பெண்களுக்கு (இதில் ஓருபாலின ஈடுபாடு உள்ளவர்கள் அடங்கும்) நடைபெறுவதாகவும் ஐ.நாவின் ஆய்வு குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அறிக்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்