தமிழக மீனவர்களை தாக்குவதற்கு இலங்கைக்கு அதிகாரம் கிடையாது - பொன்.ராதாகிருஷ்ணன்

Report Print Gokulan Gokulan in அறிக்கை

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டமை கண்டிக்கத்தக்கது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டமை குறித்து மதுரை விமான நிலையத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரித்தார். இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்

மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை தாக்குவதற்கு இலங்கை கடற்படையினருக்கு எந்த அதிகாரமும் கிடையாது.

இருநாட்டு அரசும் செய்து கொண்ட முடிவின்படி எல்லை தாண்டி சென்று மீன் பிடித்தாலும் எக்காரணம் கொண்டும் தாக்கக்கூடாது என எழுத்து மூலமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இருநாட்டு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை இந்த மாத இறுதியில் இடம்பெறவுள்ளது.

அதன் தொடர்ச்சியாக அடுத்த மாதம் (ஜனவரி) 2ஆம் திகதி இருநாட்டு மந்திரிகளும் சந்தித்து கலந்துரையாட உள்ளனர். இந்த சூழ்நிலையில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடந்திருப்பது கண்டிக்கத்தக்கது.

சம்பந்தப்பட்டவர்களுக்கு இலங்கை அரசு தண்டனை வழங்கும் என நம்புகிறேன். கச்சத்தீவில் நடைபெறும் தேவாலய திறப்பு விழாவில் தமிழக பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி அளித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் அறிக்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments