சமூக வலைத்தளங்கள் உத்தியோகபூர்வ தொலைத்தொடர்பாடல் சாதனங்களாக கொள்ளப்பட மாட்டாது

Report Print Mubarak in அறிக்கை

அரசாங்க ஊழியர்கள் உத்தியோகபூர்வ தகவல் பரிமாற்றத்திற்காக குறுஞ்செய்தி (SMS), தொலைமடல் (Fax), ஈமெய்ல் (Email), ரெலிமெய்ல் (Telemail), தொலைபேசி என்பவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ தொலைத் தொடர்பாடல் குறித்து தகவலறியும் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட விடயமொன்று தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் அதிகாரியொருவர்

அத்துடன் குறித்த முறைகள் மாத்திரமே அரசாங்க அலுவலகங்கங்களில் பயன்பாட்டிற்காக அங்கீகரிக்கப்பட்டு உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டுவிட்டர், வட்ஸ்அப் என்பன உத்தியோகபூர்வ தொலைத் தொடர்பாடல் சாதனங்களாக கொள்ளப்பட மாட்டாது எனவும், இவற்றை உத்தியோகபூர்வ தொடர்பாடல் சாதனங்களாக கருதி நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, அரச ஊழியர் ஒருவர் திடீர் விடுமுறைகளை தமது காரியாலயத்திற்கு சமூக வலைத்தளங்கள் ஊடாக அறிவிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அறிக்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers