இலங்கை மக்களின் கவனத்திற்கு!

Report Print Sujitha Sri in அறிக்கை

இலங்கையில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் புதிய தேசிய வருமான வரி சட்டம் அமுலாகிறது.

அதன் அடிப்படையில் வரிமுறைகளில் மாற்றங்கள் இடம்பெறவுள்ளதுடன், இதன் கீழ் புதிய வரிமுறைகள் அறிமுகம், பல துறைகள் சார்ந்த வரிமுறைகளில் மாற்றங்கள் என்பன மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் இலங்கையில் 18 வயது பூரத்தியாகியுள்ள அனைவருக்கும் வரி தொடர்பான ஆவணம் பேணப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வரி சட்ட திருத்தம் கடந்த ஆண்டு நாடாளுமன்றில் திருத்தத்திற்கு உட்படுத்தப்பட்டு, உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் மீள் திருத்தங்கள் செய்யப்பட்டு நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக இணைப்பு

அரசாங்க மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றுவோர் உழைக்கும் போது செலுத்த வேண்டிய வரி குறித்த சட்டங்கள் இன்று முதல் மாற்றியமைக்கப்பட உள்ளன.

இதன்படி, வருடாந்த வருமானம் 7.5 லட்சம் ரூபா என்ற எல்லை நிர்ணயம் 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

வருடாந்த வருமானம் 12 லட்சத்திற்கும் அதிகமான முதல் 6 லட்சத்திற்கு 4 வீதமும், அதன் பின்னர் அதிகரிக்கப்படும் ஒவ்வொரு ஆறு லட்சத்திற்கும் முறையே 8, 12, 16, 20 மற்றும் 24 வீத வரி அறவீடு செய்யப்பட உள்ளது.

இதற்கு முன்னதாக அதிகபட்சமாக 16 வீத வரியே அறவீடு செய்யப்பட்டிருந்தது.

இதற்கு மேலதிகமாக வருடாந்த வருமானம் 25.5 மில்லியனுக்கும் அதிக பெறுபவர்களுக்கு இதுவரையில் அறவீடு செய்யப்பட்ட வரி வீதம் 12 லிருந்து 24 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இது பெரும்பாலும் மருத்துவர்கள் மற்றும் சட்டத்தரணிகளை அதிகளவில் பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒருவர் தனக்குச் சொந்தமான இரண்டாவது வீட்டை விற்பனை செய்யும் போது முதலீட்டு வரியாக 10 வீதம் அறவீடு செய்யப்பட உள்ளது.

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களினால் உள்நாட்டு வங்கிகளில் வைப்புச் செய்யும் பணத்திற்கு 5 வீத வரி அறவீடு செய்யப்பட உள்ளது.

எனினும், வெளிநாட்டில் பணி புரிவோர் தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கும் பணத்திற்கு வரி அறவீடு செய்யப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.

சிரேஸ்ட பிரஜைகளின் 15 லட்சம் வரையிலான வைப்புக்களுக்கான வட்டிகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படுவதுடன் அதற்கு மேலதிகமாக தொகைக்கு 5 வீத வரி அறவீடு செய்யப்பட உள்ளது.

வரிச் சலுகை மற்றும் வரி விடுதலை வழங்குவதற்கு நிதி அமைச்சருக்கு காணப்பட்ட 200 சந்தர்ப்பங்கள் புதிய சட்டத்தின் ஊடாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அறிக்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers