வீட்டு நிலச்சுரங்கத்தில் பதுங்கியிருந்த மூன்று முஸ்லீம்கள் கைது!

Report Print Thayalan Thayalan in இலங்கை

பதுளை-பொகம்பர பகுதியிலுள்ள முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான வீடொன்றிலிருந்து சந்தேகத்தின் பேரில் மூன்று பேரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த வீடு தொடர்பில் அயலவர்கள் வழங்கிய தகவலையடுத்து பொலிஸார் குறித்த வீட்டினை முற்றுகையிட்டுள்ளனர்.

இதன்போது குறித்த வீட்டினுள் காணப்படும் அனைத்து அறைகளிலும் பொலிஸார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.அதன் போது ஒர் அறையினுள் நிலத்தின் கீழ் சுரங்கம் அமைத்து அந்த பகுதி மறைத்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சுரங்கத்திற்குள் பதுங்கியிருந்த மூன்று பயங்கரவாதிகள் உட்பட 5 பேரை இன்று இராணுவத்தினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் தேடப்பட்டு வந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...