இலங்கை மக்களின் 10 ஆண்டு மகிழ்ச்சி... குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு முக்கிய காரணமா? இராணுவ தளபதி சொன்ன முக்கிய தகவல்

Report Print Santhan in இலங்கை

இலங்கை மக்களின் 10 ஆண்டு மகிழ்ச்சி கூட, குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு காரணமாக இருக்கலாம் என்று இலங்கை இராணுவ தளபதி மகேஷ் சேனானநாயக் கூறியுள்ளார்.

நாட்டு மக்களால் இனி ஏப்ரல் மாதம் 21-ஆம் திகதி எப்போதும் மறக்க முடியாத அளவிற்கு தீவிரவாதிகள் தாக்குதலை நடத்திவிட்டனர். இதனால் சுமார் 253-பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

500-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ள நாட்டில் பாதுகாப்பு நடவடிக்கை பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி சந்தேகத்திற்குட்படும் நபர்கள் தென்பட்டால் உடனடியாக கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த தாக்குதல் குறித்து இலங்கை இராணுவதளபதி மகேஷ் சேனானநாயக் கூறுகையில், நாட்டில் நடந்த குண்டு வெடிப்புக்குப் பிறகு எங்களுடைய ராணுவ அதிகாரிகள், உளவுப் பிரிவினர், காவல் துறையினர் போன்ற அனைவரும் இணைந்து சந்தேக நபர்களைக் கைது செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தீவிரவாத குழுக்களில் தொடர்புடைய பலரை நாங்கள் கைது செய்துள்ளோம். எங்களால் முடிந்த வரை இந்த விவகாரத்தை விரைவாகச் செய்து முடிப்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் என்று உளவுத்துறையினரால் எச்சரிக்கப்பட்டுள்ளதால், உறுதியான தகவல்கள் எதுவும் அளிக்கப்படாததால் பொதுமக்கள் அச்சம் கொள்ளவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

இங்கு தாக்குதல் நடத்தியவர்கள் இந்தியாவில் காஷ்மீர், கர்நாடகா, கேரளா ஆகிய இடங்களுக்குப் பயணம் செய்துள்ளனர். எங்களிடம் தற்போதுள்ள தகவல் இதுதான்.

அவர்கள் எதற்காக அங்கு சென்றார்கள் என்ற விவரங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், ஏதாவது ஒரு பயிற்சி பெறவோ அல்லது வெளி நாடுகளில் உள்ள அமைப்புகளுடன் அவர்கள் தொடர்பு பெறவோ சென்றிருக்கலாம் என நிச்சயம் கூற முடியும்.

குண்டு வெடிப்புத் தாக்குதல் நடத்தியுள்ள முறையைப் பார்க்கும்போது இங்கு குண்டு வெடிப்பில் ஈடுபட்டவர்களுக்கு வெளியில் ஏதாவது ஒரு தலைமையுடன் தொடர்பு இருக்க வேண்டும். தாக்குதலுக்கு முன் அது தொடர்பாக எங்களிடம் சில தகவல்கள் இருந்தன. ஆனால், வெவ்வேறு கோணத்தில் அனைவரும் கவனம் செலுத்திச் செயல்பட்டோம். இந்திய உளவுத் துறை வழங்கிய எச்சரிக்கையில் சற்று இடைவெளி நிலவியது.

இலங்கையில் நடந்த இறுதிப் போருக்குப் பிறகு பத்து ஆண்டுகளாக மக்கள் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் வாழ்ந்தனர். பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக என்ன நடந்தது என்பதை மக்கள் மறந்து தங்களின் சந்தோஷத்தை அனுபவித்தனர். ஆனால், பாதுகாப்பை மறந்துவிட்டனர். இதனால் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம். இப்படிதான் கூறமுடியும்

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers