மத்திய கிழக்கில் பதற்றம்: இலங்கையர்கள் கவனத்திற்கு... வெளியான முக்கிய அறிவிப்பு!

Report Print Basu in இலங்கை

சவுதி அரேபியாவில் வாழும் இலங்கையர்களை பாதுகாப்பாக இருக்குமாறு தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்கா-ஈரான் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது.

பிரித்தானியா, ஜேர்மனி உள்ளிட்ட நாடுகள் பிராந்தியத்தில் உள்ள தனது குடிமக்களை அவதானத்துடன் இருக்குமாறு வலியுறுத்தியுள்ளன.

மேலும், பல நாடுகளில் ஈரான், ஈராக் வான்வழியில் விமானப் போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளனர்.

இந்நிலையில், சவுதி அரேபியாவில் வாழும் இலங்கை மக்களை அவதானமாக இருக்கும் படி கோரி தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது

அதில், மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவுகின்ற பாதுகாப்பு நிலமைகளைக் கருத்திற் கொண்டு சவூதி அரேபியாவில் வாழுகின்ற இலங்கையர்கள் அனைவரும் அவதானத்துடன் இருக்குமாறும் தேவையற்ற பயணங்கள், ஒன்று கூடல்களை தவிர்த்துக் கொள்ளுமாறும், உங்கள் கடவுச்சீட்டை தயார் நிலையில் வைத்திருக்கும் படியும் இலங்கைத் தூதுவராலயம் ஆலோசனை வழங்கியுள்ளது.

Image

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்