2019-ல் கூகுளில் இலங்கையை அதிகம் தேடிய மக்கள்... எதற்கு தெரியுமா? வெளியான தகவல்கள்

Report Print Santhan in இலங்கை

இலங்கையில் 2019-ஆம் ஆண்டு நடந்த முக்கிய நிகழ்வுகள், பெருமைப்பட வைத்த தருணம் போன்றவை குறித்த ஒரு அலசலை பார்ப்போம்.

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலினால் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது, அதன் பின் மெல்ல மெல்ல நாட்டிற்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

அதே சமயம் இந்த ஆண்டு கோட்டபாய ராஜபக்‌ஷ நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு சில அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார்.

இந்நிலையில் 2019-ஆம் ஆண்டு இலங்கை மக்கள் பெருமையடைய வைக்கும் அளவிற்கு பல நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. அது என்ன என்பதை பார்ப்போம்.

  • இலங்கை தன்னார்வத்தில் முதலிடத்தில் உள்ளது. உலகிலே இலங்கையில் தான் தன்னார்வாளர்களின் விகித சதவீதம் அதிகமாக உள்ளது. ஓவ்வொரு ஆண்டிற்கும் சுமார் 7 மில்லியன் மக்கள் தன்னார்வ தொண்டில் ஈடுபடுவதால், இலங்கையர்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டிய தருணம்.
  • இலங்கை தட்டம்மை நோயை ஒழிக்கும் 5-வது தென் கிழக்கு ஆசிய நாடாக மாறியது.

  • ஊடகங்களுக்கான சுதந்திரம் இலங்கையில் மேம்பட்டுள்ளது என்றே கூறலாம், கடந்த 2014-ஆம் ஆண்டு இந்த பட்டியலில் 165-வது இடத்தில் இருந்த இலங்கை, இந்த ஆண்டில் அதாவது 2019-ஆம் ஆண்டு 126-வது இடத்தை பிடித்துள்ளது.
  • தென் ஆப்பிரிக்கா மண்ணில் இலங்கை அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரில் குசல் ஜனித் பெரெரா 153 ஓட்டங்கள் குவித்தது மறக்க முடியாது ஆட்டம் என்றே கூறலாம்.

  • ஆணழகன் போட்டியில் இலங்கையின் Diluka Rajapaksha அவர்கள் Mr. Universe Noble King என்ற விருதை வென்றார்.

  • உலகில் பெரும்பாலோனர் பயன்படுத்தும் கூகுளில், இலங்கை தொடர்பான செய்திகளை மக்கள் அதிகம் தேடியுள்ளனர். இதில் இலங்கை 7-வது இடத்தை பிடித்துள்ளது. அதே போன்று Where is என்ற கேள்வியில், இலங்கை எங்குள்ளது என்று பலரும் தேடியுள்ளனர். இதில் இலங்கை முதலிடத்தை பிடித்துள்ளது.

  • திருமணம் முடிந்த பெண்களுக்கான அழகுப் போட்டியில் இலங்கையின் Caroline Jurie அழகியாக தெரிவு செய்யப்பட்டு இலங்கையையை பெருமைபடுத்தினார்.
  • உலகில் சுற்றுலா செல்வதற்கு சிறந்த நாடுகளில் நான்காவது இடத்தை இலங்கை பிடித்துள்ளது.
  • இது ஒரு புறம் இருந்தாலும், இன்று வரை ஈஸ்டர் தாக்குதல் காரணமாக உறவினர் மற்றும் குடும்பத்தினரை இழந்த சிலர் அதில் இருந்து மீளாமல் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...