இலங்கையில் தமிழர்கள் வாழும் மாகாணத்தின் ஆளுநராக முத்தையா முரளிதரன் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்?

Report Print Basu in இலங்கை

இலங்கை மாகாணத்தின் ஆளுநராக முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அண்மையில் வெளியான உறுதிப்படுத்தப்படாத செய்தி அறிக்கையின்படி, இலங்கை தமிழர்களின் பெரும்பான்மையைக் கொண்ட வடக்கு மாகாணத்தின் ஆளுநராக முத்தையா முரளிதரன் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்று கோட்டாபய பொறுப்பேற்றதை தொடர்ந்து இத்தகவல்கள் வெளியாகியுள்ளது.

800 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய 47 வயதான முரளிதரன் உண்மையில் கண்டியைச் சேர்ந்த இந்திய தமிழர் ஆவார். முரளிதரன் ஆளுநராவாது குறித்து இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தலும் இல்லை என்றாலும், முன்னாள் தமிழர்கள் முரளியின் நியமனத்தை எதிர்ப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

ஏனெனில். கோட்டாபயாவை 2005 மற்றும் 2015க்கு இடையில் பாதுகாப்பு செயலாளராக இருந்தபோதும் மற்றும் போர்க்குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்ட போதும் முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளிதரன் அவரை ஆதரித்தார் என்பது நினைவுக்கூரதக்கது..

இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள், அவர் கைது செய்யப்பட வழக்குத் தொடர குரல் கொடுத்தனர். இருப்பினும், அவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசாங்கம் அப்போது நிராகரித்திருந்தது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்