இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட 35 பேரில்.. அநுர குமார திஸாநாயக்க உட்பட 33 பேர் டெபாசிட் இழப்பு

Report Print Basu in இலங்கை

இலங்கையில் சமீபத்தில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட 35 வேட்பாளர்களில் 33 பேர் டெபாசிட் இழந்துள்ளனர்.

இலங்கையில் கடந்த நவம்பர் 16ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இதில், 35 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் ஒரு கோடி 60 லட்சம் பேர் வாக்களிப்பதற்கான தகுதிப்பெற்றிருந்தனர். தேர்தலில் ஒட்டுமொத்த வாக்குப்பதிவு 83.73 சதவீதமாக இருந்தது என்று தேர்தல் ஆணையத் தலைவர் மகிந்த தேசபிரியா தெரிவித்தார்.

மறுநாள் நவம்பர் 17ம் திகதி வாக்கு எண்ணிக்கை இடம்பெற்றது. அதில், இலங்கை பொதுஜன முன்னணி கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச வெற்றிபெற்று 7வது ஜனாதிபதியாக பதிவியேற்றார்.

கோத்தபய ராஜபக்ச 52.25 சதவீத வாக்குகளையும் (6,924,255), புதிய ஜனநாயக கட்சி வேட்பாளர் பிரேமதாச வாக்களித்த மொத்த வாக்குகளில் 41.99 சதவீதத்தையும் (5,564,239) பெற்றுள்ளனர்.

கோத்தபய மற்றும் சஜித்தை தவிர போட்டியிட்ட மற்ற அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர். 5 சதவீத வாக்குகள் பெறத் தவறிய தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்கவும் 3.16 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்துள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...