தமிழக அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழர்களை பகடைக்காயாக பயன்படுத்துகின்றனர்: நாமல் ராஜபக்ச அதிரடி

Report Print Basu in இலங்கை

இலங்கையின் 7வது ஜனாதிபதியாக கோத்தபய ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டதிற்கு அதிப்தி வெளிப்படத்திய தமிழக அரசியல் தலைவர்களுக்காக இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச மகனும், இலங்கை பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழகத்தின் சில தமிழ் அரசியில் தலைவர்கள் இலங்கைத் தமிழ் மக்களை பற்றி ஒருபோதும் அழமாக சிந்தித்ததும் இல்லை. அவர்களின் அடிப்படைத் தேலைவகள் பூர்த்தி செய்யும் வகையில் எந்த ஒரு ஆக்க பூர்வமான செயற்பாடுகளை செய்ததுமில்லை.

மாறாக தங்களுடைய சுயநல மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் தேவைகளுக்காக எமது நாட்டு மக்களை பகடைக்காயாக பயன்படுத்துவது தான் மிகுந்த வேதனை தரும் உண்மை.

எமது கட்சியின் சார்பில் போட்டியிட்ட திரு. கோட்டாபய ராஜபக்ச அவர்கள் இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட போது பல நாடுகளின் தலைவர்கள், குறிப்பாக பாரதப் பிரதமர் உள்ளிட்ட பாரதத்தின் பல அரசியல் தலைவர்களும் தமது வாழ்த்துக்களை வழங்கியிருந்தனர்.

தமிழகத்தின் அரசியல் தலைவர்களுக்கு நான் அன்புடன் கூறிக்கொள்ள விரும்புவது யாதெனில், நீங்கள் அனைவரும் அறிக்கையில் நிகழ்கால ஜனாதிபதி மற்றும் அரசை விமர்சிப்பதை விட்டு..விட்டு நடைமுறை அரசியில் இலங்கைத் தமிழ் மக்களைப் பற்றி சிந்திப்பது சாலச் சிறந்தது.

ஊடகங்களில் சுயநல, சந்தர்ப்பவாத அறிக்கைகளை மட்டுமே விட்டு பரபரப்பை ஏற்படத்துவதை விடுத்து எமது நாட்டு தமிழ் மக்களை உளப்பூர்வமாக நேசிக்கும் தமிழக தலைவர்களாக நீங்கள் இருந்தார், எமது மக்களின் எதிர்கால வாழ்வு சபீட்சமாக அமைய முடிந்த வரை பொறுப்புடன் செயற்படுவது காலத்தின் கட்டாயம் என தமிழகத்தின் அரசியில் தலைவர்களை அன்புடனும், மரியாதையுடனும் கேட்டுக்கொள்கிறேன் என நாமல் ராஜபக்ச அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...