இலங்கை ஜனாதிபதி தேர்தல்: சின்னத்தில் குழப்பம்! குற்றச்சாட்டு

Report Print Abisha in இலங்கை

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் சூழலில், சின்னத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் பெரிதும் பிரபலம் இல்லாத ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் ஆரியவன்ச திசநாயக்க கணிசமான வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.

ஆனால், அவர் அங்கு எந்த தேர்தல் பரப்புரையிலும் ஈடுபடவில்லை என்று கூறப்படுகின்றது. கழுகு சின்னத்தில் போட்டியிட்ட அவர் அதிக வாக்குகள் பெற்றுள்ளதாகவும், அன்னம் சின்னம் என்று பலர் கழுகுக்கு வாக்களித்துவிட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் அனுரகுமார திசாநாயக்க அன்னம் சின்னத்தில் போட்டியிட்டார். இவர், பிரசாரங்களை மேற்கொண்ட போதும், பெரும் பின்னடைவையே சந்தித்துள்ளார்.

இதனால், அவர் தரப்பில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்