இதுவரை கிடைக்கப்பெற்ற வாக்குகளின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் அமோக வாக்குகள் வித்தியாசத்தில் சஜித் முன்னிலையில்

Report Print Vijay Amburore in இலங்கை

காலி மாவட்டத்திற்கான தபால் வாக்கு எண்ணிக்கை முடிவுகளும், யாழ் நல்லூர் பிரிவிற்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கையில் நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் காலி மாவட்டத்தில் எண்ணப்பட்டு வந்த தபால் வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதில், 25,099 வாக்குகளுடன் கோத்தபாய ராஜபக்ச முதலிடத்திலும், 9,093 வாக்குகளுடன் சஜித் பிரேமதாச இரண்டாவது இடத்திலும், 2,450 வாக்குகளுடன் அனுரா குமார மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

அதனை தொடர்ந்து யாழ்ப்பாணம் மாவட்ட நல்லூர் வாக்குப்பதிவு பிரிவிற்கான எண்ணிக்கை முடிவுகளும் வெளியிடப்பட்டன.

அதில், சஜித் பிரேமதாச 27605 (86.02%) அமோக வாக்குகள் வித்யாசத்திலும், அவரை தொடர்ந்து கோத்தபாய ராஜபக்சஷ 1836 (5.75%), அனுரா குமார 166 (0.52%), மகேஷ் சேனாநாயக்க 50 (0.16%) ஆகியோர் பின்தங்கியுள்ளனர்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்