வெள்ளம் காரணமாக தேர்தல் முடிவுகள் தாமதமாகலாம்: தேர்தல் ஆணையம் தகவல்

Report Print Vijay Amburore in இலங்கை

கேகாலை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தேர்தல் முடிவுகள் தாமதமாகலாம் என தேர்தல் ஆணையர் கூறியுள்ளார்.

இலங்கை ஜனாதிபதிக்கான தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில், ஒட்டுமொத்த நாடும் தேர்தல் முடிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றது.

இந்த நிலையில் இரத்தினபுரி, பதுளை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் நேற்று பிற்பகல் நிலவிய மழையுடனான மோசமான வானிலைக காரணமாக அப்பகுதியில் சிறியவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதனால் அங்கிருந்து வாக்குப்பெட்டிகளை கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையர் மஹிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 371 தபால் வாக்கு மையங்களில் 103 மையங்களில் மட்டுமே எண்ணிக்கை முடிந்துள்ளது. இதனால் எந்த மாவட்டத்திலும் முழுமையான தபால் முடிவுகள் கிடைக்கவில்லை.

1,179 எண்ணும் மையங்களில் 30 இன் முடிவு மட்டுமே பெறப்பட்டுள்ளது, அவற்றில் மூன்று மட்டுமே சரிபார்க்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்