இறுதிக்கட்டத்தை எட்டிய தபால் வாக்கு எண்ணிக்கை - தேர்தல் ஆணையம்

Report Print Vijay Amburore in இலங்கை

தபால் வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இலங்கையில் நேற்று நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு எணிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஒட்டுமொத்த நாடும் நாளை வெளியாக போகும் தேர்தல் முடிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதற்கிடையில் சமூக ஊடகங்களில் பயனாளர்கள் பலரும் வாக்கு எண்ணிக்கைகள் குறித்த பல்வேறு யுகங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இதுகுறித்து கூறியுள்ள தேர்தல் ஆணையம், தற்போது சமூக ஊடக தளங்களில் பரவும் சில தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வ முடிவுகள் அல்ல என்று தெரிவித்துள்ளது. தபால் வாக்குகளின் முடிவுகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், அதுவும் கடைசி கட்டங்களில் உள்ளதாகவும் கூறியுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Party wise Results