இதுவரை இல்லாத அளவிற்கு அமைதியாக நடந்து முடிந்த வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையர் மகிழ்ச்சி

Report Print Vijay Amburore in இலங்கை

இலங்கையில் இதுவரை இல்லாத அளவிற்கு அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றிருப்பதாக தேர்தல் ஆணையர் மஹிந்த தேசப்பிரிய மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வாக்கு எண்ணிக்கை 80 சதவீதத்தை தாண்டும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள தேர்தல் ஆணையர் மஹிந்த தேசப்பிரிய, "எந்தவொரு கடுமையான வன்முறையும் இல்லாமல் வாக்களிப்பு முடிந்தது என்று சொல்வதில் மிகவும் மகிழ்ச்சி. இதுபோன்று முடிவடையும் முதலாவது ஜனாதிபதி தேர்தல் இதுவாகும்" எனக்கூறியுள்ளார்.

இதற்கிடையில் ஊடகங்களிடம் பேசிய தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு (பெப்ரல்) அமைப்பின் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி, பாரிய வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்றாலும் கூட, 158 சட்ட மீறல் சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...