இலங்கை தேர்தலில் வாக்களித்த தமிழர்கள் மீது தாக்குதல்! அடுத்த சில மணி நேரத்தில் அதிரடி காட்டிய பொலிசார்

Report Print Santhan in இலங்கை

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலின் போது தமிழர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் 2 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இன்று காலை முதல் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று ஐந்து மணிக்கு முடிந்தது. வாக்களிப்பின் போது கேகாலை-தெரணியாகல பகுதியில் வாக்களித்த தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

வாக்களிக்க சென்ற வாக்காளர்களை ஒரு தரப்பிற்கு வாக்களிக்க வேண்டும் என்று சில தரப்பினர் அச்சுறுத்தியுள்ளனர்.

BBC/Tamil

அதையும் மீறி தாம் விரும்பிய வேட்பாளருக்கு வாக்களித்த தமிழர்கள் மீதே சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதோடு மட்டுமின்றி, வீடு ஒன்றுக்குள் நுழைந்த சிலர் வீட்டிலிருந்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆண் ஒருவரை கத்தியால் வெட்டியுள்ளனர்.

வெட்டுக்காயங்களான நபர் தெரணியகல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின்போது ஒரு வீட்டுக்கு பெரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BBC/Tamil

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்