இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவு... பயத்தில் சிறுபான்மையினர்! வெளியான காரணம்

Report Print Santhan in இலங்கை

இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவு பெற்ற நிலையில், இதன் முடிவு என்னவாக இருக்கும் என்று சிறுபான்மையினர் பயத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் இன்று காலை 7 மணிக்கு துவங்கிய ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு, மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. வாக்குப்பதிவு முடிந்த அடுத்த சில நிமிடங்களிலே வாக்கு பெட்டிகள் உடனடியாக வாக்கு எண்ணிக்கை எண்ணும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

காலையிலிருந்து மாலை வரை துவங்கிய வாக்குப்பதிவில் 70 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலில் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி சாா்பில் கோத்தபய ராஜபட்ச (70), ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் சாா்பில், முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவின் மகனும், வீட்டு வசதி மற்றும் கலாசார விவகார அமைச்சருமான சஜித் பிரேமதாசா (52) போட்டியிடுகிறாா்.

இவா்களைத் தவிர, 35 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

இந்நிலையில் இந்த தேர்தலின் முடிவை நினைத்து சிறும்பான்மையினர் பயத்தில் உள்ளதாக பிரபல ஆங்கில ஊடகம் செய்தியாக வெளியிட்டுள்ளது.

அதில் குண்டு வெடிப்பு நடந்த சில மாதங்களுக்கு பிறகு இலங்கையில் ஜனாதிபதிக்கான தேர்தல் நடக்கிறது. இது முக்கியதுவம் வாய்ந்த தேர்தலாக பார்க்கப்படுகிறது, வேட்பாளரான கோத்தபய ராஜபட்ச வெற்றி பெற்றால் பிரதேசத்தை பிளவுபடுத்துமோ என்ற பயத்தில் சிறுபான்மையினர் இருக்கின்றனர்.

அவர், அனைத்து இலங்கையர்களுக்கும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவேன் என்றுகூறியுள்ளார். இருப்பினும் மத சிறுபான்மையினர் Buddhist தேசியவாத துறவிகளுடனான தொடர்புகளால் அவரை அவர்கள் சந்தேகத்துடன் பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்