இலங்கை ஜனாதிபதி தேர்தல்: துப்பாக்கிசூடு சம்பவத்தை எதிர்கொண்டவர் பகிர்வு!

Report Print Abisha in இலங்கை

இலங்கை ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெற்ற நிலையில், இஸ்லாமியர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இன்று இலங்கையில் 8வது ஜனாதிபதி தேர்தல் வாக்குபதிவு நடைபெற்றது. அதில் வாக்களிக்க சென்ற இஸ்லாமியர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. இது குறித்து பாதிக்கப்பட்ட நபரான முபீத் என்பவர் நிகழ்ந்தவற்றை குறித்து பிபிசியிடம் பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது ”அரசு போக்குவரத்து சபைக்கு சொந்தமான நான்கு பேருந்துகளில் நாங்கள் பயணித்திருந்தோம். இடையில், நொச்சயாகம பொலிஸ் நிலையம் சென்று பயணம் பற்றி தெரியப்படுத்தினோம்.

நான்கு பேருந்தில் ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்தது. ஏனைய மூன்று பேருந்துகளும், குறுகிய இடைவெளியில் பயணித்துக் கொண்டிருந்தன.

முபீத்

அப்போது ஓயாமடுவ - தந்திரிமலை பகுதி வீதியை மறித்து டயர்கள் எரிந்து கொண்டிருந்தன. அதனால் பேருந்துகளை நிறுத்தினோம். அப்போது பேருந்துகள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த நிலையை புரிந்து கொண்ட சாரதி எரிந்த டயர்கள் மீது பேருந்தை ஏற்றி கடந்து வந்தார். அதனை தொடர்ந்து வந்த பேருந்து அப்படி வந்தது. ஆனால், மூன்றாவது வந்த பேருந்தின்மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது.

அந்த பேருந்து மீது 17முறை சுடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்”.

அங்கிருந்து 14கிலோமீற்றர் தூரத்தில் இருக்கும் செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியதாகவும் முபீத் பகிர்ந்துள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்