இலங்கை ஜனாதிபதி தேர்தல்: வாக்குசாவடி அத்துமீறல்கள்!

Report Print Abisha in இலங்கை

இலங்கையில், வாக்குசாவடியில் அத்துமீறல்களில் ஈடுபட்டவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இலங்கை 8வது ஜனாதிபதி தேர்தல், இன்றுகாலை 7மணிக்கு துவங்கி நடைபெற்று வருகின்றது. அதில், முல்லைதீவு பகுதியில் உள்ள வாக்குசாவடிக்கு உள் பகுதியில் புகைப்படம் எடுத்த பத்திரிகையாளர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், டோடண்டுவாவில் வாக்குச் சீட்டை புகைப்படம் எடுத்த கடற்படை பிரிவை சேர்ந்த நபர் ஒருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

கேகாலை - தெரணியாகல பகுதியில் வாக்களித்த தமிழர்கள் சிலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தியவர்கள், குறிப்பாக ஒரு தரப்பினருக்கு வாக்களிக்க உத்தரவிட்டதாகவும், மறுப்பு தெரிவித்ததால், அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவு பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, வீடு ஒன்றுக்குள் நுழைந்த சிலர் வீட்டிலிருந்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், ஆண் ஒருவரை கத்தியால் தாக்கியுள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுளை - ஹப்புத்தளை பகுதியில் வன்முறை சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

அரசியல்வாதிகள் சிலர் எதிர்த்தரப்பு ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் பெண்ணொருவருக்கு காயம் ஏற்பட்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்