இலங்கை ஜனாதிபதி தேர்தல்! வாக்களிப்பது எப்படி?

Report Print Fathima Fathima in இலங்கை

இலங்கையில் 8வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் 12,845 வாக்களிப்பு நிலையங்களில் இந்த முறை ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது.

இந்த முறை 1 கோடியே 59 லட்சத்து 92 ஆயிரத்து 096 வாக்காளர்கள், வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

நாட்டிலேயே அதிகப்படியான வாக்காளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ள நிலையில், தமிழர்கள் செறிந்து வாழும் திருகோணமலையிலேயே குறைவான வாக்காளர்கள் பதிவாகியுள்ளனர்.

வாக்களிப்பது எப்படி?

வாக்களிக்க செல்லும் போது தனது வாக்களார் சீட்டுடன், ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும்.

வாக்கு சீட்டில் வாக்காளர் தெரிவு செய்யும் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்திற்கு முன்பாக ஒரு புள்ளி இட வேண்டும்.

அவ்வாறு இல்லையென்றால், வாக்காளர்களுக்கு மூன்று தெரிவுகள் காணப்படுமாயின், வேட்பாளர்கள் மூவரின் பெயர் மற்றும் சின்னங்களுக்கு முன்பாக ஒன்று, இரண்டு, மூன்று என இலக்கங்களில் எழுத வேண்டும்.

அவ்வாறின்றி வேறு விதத்தில் அடையாளங்களோ அல்லது பல புள்ளிகளோ இடும் பட்சத்தில், அது நிராகரிக்கப்பட்ட வாக்காக பதிவாகும்.

வாக்களிக்க செல்லும் போது வித்தியாசமான கண்ணாடிகள் அணிவதும், முழுமையாக முகத்தை மூடிச் செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

வாக்களிப்பு நிலையங்களில் காணொளி மற்றும் புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அனுமதி வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் தவிர மற்ற அதிகாரிகள் வாக்களிப்பு நிலையங்களுக்குள் துப்பாக்கி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்