தமிழர்கள் உட்பட 35 பேர் ஜனாதிபதி பதவிக்கு போட்டி: இலங்கையில் வரலாற்று சாதனை

Report Print Basu in இலங்கை

இலங்கையில் அடுத்த மாத நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட 35 வேட்பாளர்கள் திங்கள்கிழமை வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

நேற்று மதியம் வரை வழங்கப்பட்ட காலக்கெடுவிற்குள் கட்டாய வைப்புத்தொகையை நடப்பு ஜனாதிபதி சிறிசேன செலுத்தவில்லை. இதனால், அவர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை என அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியானது.

எனினும், 41 வேட்பாளர்கள் காலக்கெடுவிற்கு முன்னர் வைப்புத்தொகையை செலுத்தினர், ஆனால், அவர்களில் 6 பேர் போட்டியிலிருந்து வெளியேறினர். தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய இரண்டு மணி நேர கால அவகாசத்தைத் வழங்கியது.

இதில் 35 வேட்பாளர்கள் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேட்புமன தாக்கல் செய்துள்ளனர். இது இலங்கை வரலற்றிலேயே அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் தேர்தலாக 2019 தேர்தல் அமைந்துள்ளது.

இதற்கு முன்பு அதிகபட்சமாக 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதிப தேர்தலில் 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

ஜனாதிபதி வேட்பாளர்களில் இரண்டு பௌத்த பிக்குகள், நாட்டின் சிறுபான்மை முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த நான்கு பேர் மற்றும் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த இருவர் உள்ளனர். இவர்களில் ஒரே ஒரு பெண் வேட்பாளர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ச குடும்பத்திலிருந்து சகோதர்களான கோத்தாபய ராஜபக்ச மற்றும் சாமல் ராஜபக்ச ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்