இலங்கை ஜனாதிபதி தேர்தல்: சிறிசேன அதிரடி முடிவு.. ராஜபக்ச குடும்பத்திலிருந்து களமிறங்கும் இரண்டு வேட்பாளர்கள்

Report Print Basu in இலங்கை

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நவம்பரில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் நிற்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளார்.

அதேசமயம் அரசியல் ரீதியாக செல்வாக்கு மிக்க ராஜபக்ச குடும்பத்தில் இரண்டு வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட டெபாசிட் செய்துள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் பதிவுகளின்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் 16ம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட ஞாயிற்றுக்கிழமை நண்பகல் காலக்கெடுவிற்குள் டெபாசிட் செலுத்திய 41 வேட்பாளர்களின் பட்டியலில் சிறிசேனாவின் பெயர் இல்லை.

அதாவது, தேர்தலுக்கு மறுநாளே சிறிசேனா பதவியில் இருந்து விலகுவார், தனது ஐந்தாண்டு காலத்தை 52 நாட்களுக்கு முன்னதாக அவர் விலகுகிறார். சிறிசேனாவின் இலங்கை சுதந்திரக் கட்சியின் செய்தித் தொடர்பாளர், அவர் மறுதேர்தலை போட்டியிட வில்லை என்பதை உறுதிப்படுத்தினார்.

கடந்த ஆண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்து அவருக்குப் பதிலாக முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சாவை நியமித்தபோது, சிறிசேன அரசியலமைப்பு நெருக்கடியை ஏற்படுத்தினார்.

பின்னர், சிறிசேனாவின் நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து, விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமர் பதிவியில் அமர்த்தியது.

ராஜபக்சாவின் இரண்டு சகோதரர்கள் - இளைய சகோதரர் கோதபயா மற்றும் மூத்த சகோதரர் சாமல் - வேட்பாளர்களாக போட்டியிடுவதற்கு வைப்புத்தொகை செலுத்தியுள்ளனர் மற்றும் விக்ரமசிங்கத்தின் ஐக்கிய தேசிய கட்சியின் துணைத் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு சவால் விடுத்துள்ளனர்.

ராஜபக்ச அதிகாரத்தில் இருந்த போது பாதுகாப்பு அமைச்சகத்தின்ன் முன்னாள் செயலாளராக இருந்து கோதபயா மீது ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் இலங்கை குடியுரிமை தொடர்பாக பல நீதிமன்ற வழக்குகளை எதிர்கொள்கிறார். எனினும், 2003ல் பெற்ற அமெரிக்க குடியுரிமையை கைவிட்டதாக அவர் கூறுகிறார்.

இருப்பினும், அவரது தகுதி குறித்து சந்தேகம் எழுந்துள்ள நிலையில், முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகரான மூத்த சகோதரர் சாமலையும் ராஜபக்ச குடும்பம் முன்னெச்சரிக்கையாக நிறுத்துகிறது.

இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட 15.99 மில்லியன் ஆண்களும் பெண்களும் தேர்தலில் வாக்களிக்க தகுதியுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்