இலங்கைக்கு மகிழ்ச்சியுடன் திரும்பிய ஈழ தமிழர்கள்! பல ஆண்டுகளாக வைக்கப்பட்ட கோரிக்கை நிறைவேற்றம்

Report Print Raju Raju in இலங்கை

தமிழகத்தில் இருந்த இலங்கை தமிழர்கள் 40 பேர் மகிழ்ச்சியுடன் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பியுள்ளனர்.

வேலுார் மாவட்டத்தில் உள்ள மேல்மொணவூர், ஆம்பூர், வாலாஜாபேட்டை, நெமிலி, குடியாத்தம் ஆகிய இடங்களில், இலங்கை தமிழர் முகாம்கள் உள்ளன. இங்கு, 3,450 இலங்கை தமிழர்கள் தங்கியுள்ளனர்.

இவர்களில் பலர் தாயகமான இலங்கைக்கு செல்ல பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் இதிலிருந்து 40 பேர் சமீபத்தில் மகிழ்ச்சியுடன் தாயகம் திரும்பியுள்ளனர்.

இது தொடர்பில் முகாம் மறுவாழ்வு அதிகாரிகள் கூறுகையில், இங்கு தங்கியுள்ளவர்கள் தாயகம் செல்ல விரும்பினால் அவர்கள், ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வேண்டும்.

அவர்கள் மீது குற்ற வழக்குகள் இல்லை என பொலிசார் சான்று வழங்கி தீவிர விசாரணை நடத்திய பின்னர் அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இலங்கைக்கு செல்ல விரும்புவதாக கடந்த ஜனவரியில், 87 தமிழர்கள் மனு அளித்திருந்தனர்.

இதில், 40 பேர் இலங்கைக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது என கூறியுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்