இலங்கை புத்த விழாவில் யானைகளுக்கு மதம் பிடித்து மக்களை மிதித்து ஓடிய கோரம்: திகில் கிளப்பும் காட்சி

Report Print Basu in இலங்கை

இலங்கையில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற புத்த சமய திருவிழாவான பெரஹர விழாவில் பங்கேற்ற இரண்டு யானைகளுக்கு மதம் பிடித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kotte பகுதியிலே இச்சம்பவம் நடந்துள்ளது. இதில், 17 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பெரஹர விழாவில் இரண்டு யானைகளுக்கு மதம் பிடித்து ஓடியதாக கூறப்படுகிறது.

நிகழ்வின் போது சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு விழாவில் பங்கேற்ற யானைகள், மேல தாளங்களுடன் ஊர்வலமாக பவனி வந்துள்ளது. அப்போது, தீடீரென மக்கள் அலறி ஓடி வர, இதைக்கண்ட யானை, முன்நின்றுக் கொண்டிருந்தவர்களை வீசி மிதித்து ஓடுகிறது. மக்கள் தங்களின் உயிருக்கு பயந்து தெறித்து ஓடியுள்ளனர்.

இதில் காயமடைந்தவர்கள் உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். விபத்தில் காயம் அடைந்த 12 பெண்கள் உள்பட 17 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பெரஹர விழாவில் சமார் 60 யானைகள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், கண்டியில் நடைபெற்ற பெரஹர விழாவில் மோசமான நிலையில் இருந்து டிக்கரி என்ற 70 வயது பெண் யானை பங்கேற்றது கடும் சர்ச்சை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்