புலிகள் ஒழிக்கப்பட்ட நாள் தான் என்னுடைய? இலங்கை வீரர் முரளிதரனின் சர்ச்சை பேச்சு

Report Print Santhan in இலங்கை

இலங்கை அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரன் தமிழீழ விதலைப் புலிகள் ஒழிக்கப்பட்ட நாள் தான் தனக்கு மிக முக்கியமான நாள் என்று கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய வம்சாவளி தமிழரான முத்தையா முரளிதரன், இலங்கை கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சாளராக இருந்து வந்தவர்.

இலங்கை அணியின் ஜாம்பவான்களின் வரிசையில் இருக்கும் முத்தையா முரளிதரன் ஓய்வை அறிவித்தாலும், அவ்வப்போது கிரிக்கெட்டிற்கு தன்னால் என்ன முடியுமோ அதை எல்லாம் செய்து வருகிறார்.

இவரின் வாழ்க்கை வரலாறு படத்தில் விஜய்சேதுபதி நடிப்பதாக கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இலங்கையில் விரைவில் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கோத்தபாய ராஜபக்ச ஏற்படுத்திய வியத்மக என்ற அமைப்பின் சார்பிலான நிகழ்ச்சியில் பங்கேற்ற முத்தையா முரளிதரன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சமாதான பேச்சுவார்த்தைகளின் போது வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அப்பாவி மக்களை அவர்கள் படுகொலை செய்தனர்.

அதேநேரத்தில் இலங்கை அரசும் ஒருகட்டத்தில் தவறு செய்தது. பின்னர் விடுதலைப் புலிகளும் தவறு செய்தனர். 2009-ல் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாள்தான் எனக்கு மிக முக்கியமான ஒருநாள்.

இலங்கையைப் பொறுத்தவரை அனுபவம் வாய்ந்த ஒரு அரசியல்வாதிதான் ஆட்சி செய்ய வேண்டும். அவரே அடுத்த ஜனாதிபதியாக வர வேண்டும். மக்கள் பிரச்னைகளுக்கு அனுபவம் உள்ள ஒருவரால்தான் தீர்வு காணவும் முடியும்

மக்களுக்கு பாதுகாப்பு வழங்க தகுதியான ஒரு தலைவருக்குத்தான் ஜனாதிபதி தேர்தலில் நானும் வாக்களிப்பேன் என்று கூறியுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers