இலங்கை விமான நிலையத்தில் கையும் களவுமாக சிக்கிய இந்தியர்கள்... அவர்கள் என்னை வைத்திருந்தார்கள் தெரியுமா?

Report Print Santhan in இலங்கை

இலங்கையில் ஆறு இந்தியர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அதற்கான காரணம் என்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் இருந்து சுற்றுலா விசாவில் வந்த இந்தியர்கள், பெருமளவு தங்கத்தை சட்டவிரோதமாக இந்தியாவிற்கு கடத்தவுள்ளதாக, குற்றப்புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலையடுத்து, விமானநிலையத்தில் அதிகாரிகள் உஷார்ப்படுத்தப்பட்டனர்.

இதையடுத்து தலைநகர் கொழும்புவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வழியாக சென்னைக்கு பயணிக்க இருந்த ஆறு இந்தியர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விமான நிலையத்தின் வெளியேறும் நுழைவாயிலில் வைத்து முதலில் 4 இந்தியர்கள் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடமிருந்து 1,060 கிராம் எடையுடைய தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 1,370 கிராம் எடையுடைய தங்கத்துடன் இரண்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.

இதன் மதிப்புஇலங்கை ரூபாயில் சுமார் 2 கோடி வரை வரும் எனவும், இதே போன்று தாய்லாந்திலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு தங்க ஆபரணங்களை கொண்டு வர முயற்சித்த குற்றச்சாட்டில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகரிலிருந்து இலங்கைக்கு வந்த இரண்டு விமானங்களில் இந்த சட்டவிரோத தங்க நகைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

சந்தேக நபர்களிடம் இருந்து சுமார் நான்கு கிலோகிராம் எடையுடைய ஆபரணங்களை கைப்பற்றியுள்ளதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்