தமிழகத்தில் கைது செய்யப்பட்ட இலங்கை வாலிபர்.. புகைப்படத்துடன் வெளியான தகவல்

Report Print Santhan in இலங்கை

தமிழகத்தில் பைபர் படகுடன் சிக்கிய இலங்கையை சேர்ந்த வாலிபரை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேதாரண்யம் கடற்கரைக்கு இன்று அதிகாலை சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் மூன்று பேர் பைபர் படகு ஒன்றில் வந்துள்ளனர். அதன் பின் அவர்கள் படகிலிருந்து இறங்கி, ஆறுகாட்டுத்துறைக்குச் சென்றதை மீனவர்கள் பார்த்துள்ளனர்.

இதனால் பொலிசாருக்கு தகவல் கொடுத்த மீனவர்கள், குறித்த பகுதிக்கு விரைந்துள்ளனர். அப்போது மூன்று பேரில் இரண்டு பேர் தப்பி விட, ஒருவர் மட்டும் பொலிசில் சிக்கியதால், அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அவரின் பெயர் ரிக்காஸ் எனவும், இவர் இலங்கை திரிகோணமலையை சேர்ந்த ரிக்காஸ் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மற்ற இருவர் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடத்தல் திட்டத்துடன் வந்தார்களா? என்பது குறித்தும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்