இலங்கை தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் குடும்பத்தினரின் சடலங்கள் தோண்டியெடுப்பு!

Report Print Arbin Arbin in இலங்கை

இலங்கையின் சாய்ந்தமருது பகுதியில் தற்கொலை குண்டை வெடிக்கச் செய்து பலியான தீவிரவாதி சஹ்ரானின் குடும்பத்தார் சிலரின் சடலங்களை அதிகாரிகள் தோண்டி எடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் அம்பாறை நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஈஸ்டர் நாளன்று இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவர் சஹ்ரான் ஹாஷிம்.

இவரும் குறித்த தற்கொலை தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு உறுதிபட தெரிவித்துள்ளது.

தற்போது அடக்கம் செய்யப்பட்டிருந்த சஹ்ரானின் குடும்ப உறுப்பினர்கள் சிலரின் உடல் பாகங்களை டி.என்.ஏ சோதனைக்கு உட்படுத்தவே தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 26 ஆம் திகதி சாய்ந்தமருது பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில், சஹ்ரான் குழுவினரும் அவர்களின் குடும்பத்தினரும் தங்கியிருந்த நிலையில், அவர்களை படையினர் சுற்றி வளைத்தனர்.

இதனையடுத்து நடந்த துப்பாக்கிச் சண்டையிலும், தற்கொலைக் குண்டுகளை தீவிரவாதிகள் வெடிக்கச் செய்ததாலும் அந்த குடியிருப்பில் தங்கியிருந்த சஹ்ரானின் இரண்டு சகோரரர்களும் தந்தையும் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர்.

ஆனால் தற்கொலை குண்டுவெடிப்பு நடந்த அந்த குடியிருப்பில் இருந்து காயங்களுடன் சஹ்ரானின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்