கனடாவில் வேலை வாங்கித்தருவதாக இலங்கை பெண் செய்த மோசடி! வெளியான தகவல்

Report Print Balamanuvelan in இலங்கை

இலங்கையில் சட்ட விரோதமாக வெளி நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தி வந்த ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

Ekalaவைச் சேர்ந்த அந்த பெண் Borellaவில் ஒரு வெளி நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

கனடாவில் வேலை வாங்கித்தருவதாக இணையத்தில் விளம்பரம் கொடுத்து மக்களை ஏமாற்றிய அந்த பெண், வெளிநாட்டு வேலை வாய்ப்பு துறை விசாரணை பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது அலுவலகத்தை சோதனையிட்ட பொலிசார் கனடாவுக்கு ஆட்களை அனுப்பும் ஏராளமான ஒப்பந்தங்களையும், கட்டுக்கட்டாக விண்ணப்பப்படிவங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

விசாரணையில் தான் மற்றொரு நபரின் கீழ் வேலை செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.

அந்த மற்றொரு நபரை கைது செய்யும் முயற்சியில் இறங்கியுள்ள பொலிசார், கைது செய்யப்பட்டுள்ல அந்த பெண்ணை அடுத்த மாதம் 7ஆம் திகதி வரையில் காவலில் அடைத்துள்ளனர்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்