நான் வெளிநாட்டிற்கு செல்லவில்லை... தயவு செய்து அப்படி செய்தி போடாதீர்கள்! ஜெயசூர்யா வேதனை

Report Print Santhan in இலங்கை

கனடா சென்றிருப்பதாக தன்னைப் பற்றி வந்த செய்தி முற்றிலும் போலியானது என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சனத் ஜெய சூர்யா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று ஏற்பட்ட தாக்குதலில் இருந்து மக்கள் மெல்ல மெல்ல தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய நிலையில், திடீரென்று இஸ்லாமிய மக்கள் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதலால் நாட்டில் அமைதியின்மையை சீர் குலைத்தது.

அதன் பின் தற்போது மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் வீரரான சனத் ஜெயசூர்யாவின் உடல்நிலைப் பற்றி சமூகவலைத்தளங்களில் செய்தி வெளியாகின, அதுமட்டுமின்றி அவர் கனடாவிற்கு சென்றுவிட்டதாக கூறப்பட்டது.

இந்த செய்தியை அறிந்த ஜெயசூர்யா உடனடியாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நான் கனடாவிற்கு செல்லவில்லை, இலங்கையில் தான் இருக்கிறேன், தயவு செய்து போலி செய்திகள் பரப்புவதை நிறுத்துங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers