இலங்கை மசூதியில் நடந்த பிரார்த்தனையில் கலந்து கொண்ட துறவி மற்றும் பாதிரியார்கள்... நெகிழ்ச்சி புகைப்படங்கள்

Report Print Raju Raju in இலங்கை

இலங்கையில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனை நடைபெற்ற நிலையில் அதை இந்து துறவியும், கிறிஸ்துவ பாதிரியாரும் உட்கார்ந்து பார்த்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இலங்கையின் சில பகுதிகளில் நான்கு நாட்களுக்கு முன்னர் இஸ்லாமியர்களின் கடைகள், நிறுவனங்கள் மற்றும் மசூதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

minuwangoda-வில் உள்ள ஒரு மசூதி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இது தொடர்பான கைது நடவடிக்கையை பொலிசார் ஏற்கனவே எடுத்துள்ளனர்.

இந்நிலையில் தாக்குதல் நடத்தப்பட்ட மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை பிரார்த்தனைகள் நடைபெற்றது.

இதையடுத்து இஸ்லாமியர்கள் பலர் பிரார்த்தனையில் கலந்து கொண்டனர். இந்த பிரார்த்தனை கூட்டம் நடந்த இடத்தில் துறவி மற்றும் இரண்டு பாதிரியார்களும் இருந்தனர்.

முதல் மாடியில் பிரார்த்தனை நடந்த நிலையில் அதை பார்த்தபடி அவர்கள் இருந்தார்கள்.

மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டான இந்த செயல் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers