இலங்கையில் தாக்குதல் நடத்திய முக்கிய தீவிரவாதியான ஜகரன் ஹாசிமுடன் தொடர்பில் இருந்த இருவர் கைது

Report Print Raju Raju in இலங்கை

இலங்கையில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய முக்கிய தீவிரவாதி ஜகரன் ஹாசிமுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக நம்பப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 253 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலை தேசிய தவ்ஹித் ஜமாத்தின் தலைவர் ஜகரன் ஹாசிம் தான் முன்னின்று நடத்தியதாக கருதப்படுகிறது.

இந்நிலையில் ஜகரன் ஹாசிமுடன் முன்னர் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக நம்பப்படும் இருவரை சிறப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான செய்தியை Adaderana பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

இருவரையும் Horowpathana பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers