சிரியாவில் ஐ.எஸ் அமைப்பிடம் பயிற்சி பெற்ற இலங்கையர்கள்... 4 மில்லியன் பணம் அனுப்பப்பட்டதா?

Report Print Santhan in இலங்கை

சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிடமிருந்து மூன்று இலங்கையர்கள் பயிற்சி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலினால் பலர் தங்கள் உறவினர்களை இழந்து தவித்து வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து சகஜ நிலைக்கும் மக்கள் திரும்பிய நிலையில், சமீபத்தில் இஸ்லாமியர்களின் கடை மற்றும் மசூதிகளில் நடந்த தாக்குதலினால் மீண்டும் அமைதியின்மை ஏற்பட்டது.

இதனால் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் மூன்று இலங்கையர்கள் சிரியாவில் ஐ.எஸ். அமைப்பிடம் பயிற்சி பெற்றதாகவும், அதே சமயம் 4 மில்லியன் பணம் இலங்கைக்கு அனுப்பப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. ஆனால் அந்த மூன்று இலங்கையர்கள் யார் என்பது குறித்து எந்த ஒரு விளக்கமும் இல்லை.

இது தொடர்பான டுவிட்டைக் கண்ட இலங்கையின் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தற்போது இருக்கும் சூழ்நிலையில் சிரியாவில் ஐ.எஸ். அமைப்பினருக்கு இடமே இல்லை, அப்படி இருக்கும் நிலையில் இவர்கள் எப்படி அங்கு பயிற்சி பெற்றிருக்க முடியும்? அதுமட்டுமின்றி 4 மில்லியன் பணம் அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது, ஆனால் அது யாருக்கு எங்கு அனுப்பப்பட்ட விவரமும் இல்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்