இலங்கையில் மீண்டும் ஊரடங்குச்சட்டம் அமல்

Report Print Basu in இலங்கை

இலங்கையில் வடமேற்கு மாகாணம் மற்றும் கம்பஹா பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மே 15ம் திகதி இரவு 7 மணி முதல் மே 16ம் திகதி காலை 4 மணி வரை ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர அறிவித்துள்ளார்.

இலங்கையில் தொடர் வன்முறை காரணமாக நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று காலை தளரத்தப்பட்டது.

இந்நிலையில், வடமேற்கு மாகாணம் மற்றும் கம்பஹா பகுதிகளில் வன்முறை வெடித்து தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் அப்பகுதிகளில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், குருநாகல், குளியாப்பிட்டிய, நிகவெரட்டிய மற்றும் சிலாபம் பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை தொடர்பாக 78 பேரை கைது செய்து விளக்க மறியலில் வைத்துள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்