இலங்கையில் 12 வங்க தேசத்தினர் அதிரடி கைது.. தொடரும் தேடுதல் வேட்டை

Report Print Basu in இலங்கை

இலங்கையில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்க தேசத்தைச் சேர்ந்த 12 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

மால்வனா மற்றும் சாபுஜஸ்கந்தா பகுதிகளில் தங்கியிருந்த 12 வங்க தேசத்தினர் போலி விசா வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலை தொடர்ந்து, சரியான ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை தேடும் பணி நாடு முழுவதும் முடக்கி விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மால்வனா மற்றும் சாபுஜஸ்கந்தா பகுதியில் நடந்த தேடுதல் வேட்டையில் போலி ஆவணங்கள் வைத்திருந்த வங்க தேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்