இலங்கையில் நிலவும் சூழ்நிலை... வெளிநாட்டிற்கு படகில் தப்பி ஓட முயற்சி

Report Print Santhan in இலங்கை

இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு தப்பி ஓட முயற்சித்தவர்களை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சவுக்கடி பகுதியில் இருந்து, கடந்த 12-ஆம் திகதி காலை படகு வழியாக வெளியேற முயன்றவர்கள் குறித்து, மீனவர்கள் சந்தேகம் அடைந்தனர்.

இதனால் அவர்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுக்க, விரைந்து வந்த பொலிசார் அங்கு 3 பேரை கைது செய்தனர்.

அதில் கலாவத்தை பகுதியை சேர்ந்த 2 சிங்களவர்களும், வந்தாறு மூலையை சேர்ந்த ஒருவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுடன் சேர்ந்து 15-க்கும் மேற்பட்டவர்கள் சட்டவிரோதமான முறையில் படகு வழியாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றுள்ளனர்.

காவல்துறையின் கையில் சிக்காமல் தப்பிய 15-க்கும் மேற்பட்டவர்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக மட்டக்களப்பு காவல்துறை தெரிவித்துள்ளது.

இலங்கையில் இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரம் ஆங்காங்கே நடந்து வரும் நிலையில், வரும் காலங்களில் படகு வழியாக மேலும் பலர் வெளியேறக்கூடும் என்று கூறப்படுகிறது.

கடந்த 2009-ஆம் ஆண்டு போர் முடிந்த பின், அவுஸ்திரேலியாவை நோக்கி பெருமளவில் ஈழத் தமிழர்கள் பயணிக்கத் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்