இலங்கையில் தீவைத்து எரிக்கப்பட்ட தொழிற்சாலை... நேரில் பார்த்த சாட்சிகள் வெளியிட்ட தகவல்... வெளியான வீடியோ

Report Print Raju Raju in இலங்கை

இலங்கையின் Minuwangoda நகரில் நேற்று இஸ்லாமியர் ஒருவருக்கு சொந்தமான தொழிற்சாலையை ஒரு கும்பல் தீவைத்து எரித்த நிலையில் அது குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.

இது குறித்த செய்தி மற்றும் வீடியோ @usmanali_la என்பவரின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி இலங்கையின் Minuwangoda நகரில் நேற்று இஸ்லாமியர் ஒருவருக்கு சொந்தமான தொழிற்சாலைக்குள் 500 பேர் புகுந்து தீவைத்து எரித்ததாகவும் அதை பார்த்த சாட்சிகள் மூலம் தெரியவந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த தொழிற்சாலை சில மாதங்களுக்கு முன்னரே தொடங்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை தடுக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அந்த டுவிட்டர் பக்கத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்