இலங்கை குண்டுவெடிப்புக்கு தேவையான வெடிபொருட்கள் இந்த நாட்டில் இருந்து தான் கொண்டு வரப்பட்டதா?

Report Print Raju Raju in இலங்கை

இலங்கை குண்டுவெடிப்புக்கு உபயோகப்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் தென்னிந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம் என அந்நாட்டு ராணுவம் கூறியுள்ளது.

இலங்கையில் கடந்த 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 253 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றது.

இந்நிலையில் இந்த குண்டுவெடிப்புக்கு உபயோகிக்கப்பட்ட வெடிபொருள் சம்மந்தமாக இலங்கை ராணுவ அதிகாரி மகேஷ் சேனநாயகே பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், இலங்கையில் மீண்டும் குண்டு வெடிக்கும் அபாயம் உள்ளது.

பயங்கரவாதிகள் சிலர் இன்னமும் பதுங்கி இருக்க கூடும், குண்டு வெடிப்பிற்கு தேவையான வெடிபொருட்கள் தென்னிந்தியாவில் இருந்து வந்திருக்கக்கூடும் என கூறியுள்ளார்.

மேலும் குண்டு வெடிப்பில் ஈடுபட்ட பயங்கரவாதிகள், கேரளா, காஷ்மீர், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பயிற்சி பெற்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...