ஈஸ்டர் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்: சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர் கைது!

Report Print Arbin Arbin in இலங்கை

இலங்கையில் ஈஸ்டர் நாளில் பயங்கரவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட தற்கொலை தாக்குதலில் தொடர்பு இருப்பதாக கூறி சர்வதேச அளவில் பிரபலமான தகவல் தொழில்நுட்ப சேவைகள் நிறுவனம் ஒன்றின் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தகவலை இலங்கை பொலிசார் உறுதி செய்துள்ளனர். சர்வதேச அளவில் பிரபலமான தகவல் தொழில்நுட்ப சேவைகள் நிறுவனங்களில் ஒன்றான Virtusa என்ற நிறுவனத்தின் ஊழியரே கைதாகியுள்ளார். இது குறித்த செய்தியை Reuters வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் 27 ஆம் திகதி குறித்த நபர் கைது செய்யப்பட்டதாகவும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அதிகாரிகள் முன்னெடுக்கும் விசாரணையின் ஒருபகுதியாகவே கைது நடவடிக்கை எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Virtusa நிறுவனத்தின் அமெரிக்காவில் உள்ள தலைமையகமும் குறித்த தகவலை உறுதி செய்துள்ளது.

கொழும்பில் அமைந்துள்ள Virtusa நிறுவன ஊழியரே கைதானவர். ஆனால் எந்த காரணத்திற்காக கைதாகியுள்ளார் என்பது தெரியவில்லை என குறித்த நிறுவனத்தின் தலைமையகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் நாளில் பயங்கரவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக இதுவரை நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்ற பின்னர், இலங்கையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் இதுவரை சர்வதேச நாடுகள் எதுவும் பயண தடைகளை விலக்கிக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...