இலங்கையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்... வெளிநாட்டில் முக்கிய குற்றவாளி கைது

Report Print Santhan in இலங்கை

இலங்கையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் சவுதிஅரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் தீவிரவாதிகள் அடுத்தடுத்து நடத்திய தற்கொலைப் படை தாக்குதலினால் 250-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தீவிரவாதிகள் எங்கு தங்கினார்கள், அவர்கள் சதித்தீட்டம் தீட்டியது எப்படி என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த தாக்குதலுக்கு காரணமான முக்கிய குற்றவாளிகளில் ஒருவன் சவுதி அரபியாவில் சில தினங்களுக்கு முன்பு உள்ளூர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இலங்கை அதிகாரிகள் தற்போது அங்கு விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்