இலங்கை தேவாலயத்தில் நடந்த தாக்குதல்... நெகிழ்ச்சியுடன் சனத் ஜெயசூர்யா வெளியிட்ட புகைப்படங்கள்

Report Print Santhan in இலங்கை

இலங்கை தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலைத் தொடர்ந்து, கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சனத் ஜெயசூர்யா குண்டு வெடிப்பு தாக்குதலால் பாதிப்புக்குள்ளாகியிருந்த தேவலாயத்தை பார்க்க சென்ற புகைப்படங்களை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தி பதிவேற்றம் செய்துள்ளார்.

ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் தேவாலயம் மற்றும் ஹோட்டல்களில் தீவிரவாதிகள் நடத்திய அடுத்தடுத்த தற்கொலைப் படை தாக்குதலால் 250-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதனால் 200 குழந்தைகள் அனாதையாகியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனால் 21.04.2019 இலங்கை மக்களின் மறக்க முடியாத நாளாக மாறியுள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக நாடு சகஜ நிலைமைக்கு திரும்பி வருகிறது.

அந்த வகையில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சனத்ஜெயசூர்ய குண்டு வெடிப்பு நிகழ்ந்த தேவாலயத்திற்கு சென்றுள்ளார்.

இது குறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நான் புத்த மதத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும், நான் இங்கு பல முறை வந்துள்ளேன், கடந்த(21/4) தாக்குதல் மிகுந்த வருத்ததை கொடுப்பதாகவும், ஒரு தேசமாக நாம் தொடர்ந்து பிரார்த்திப்போம் என்று கூறியுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers